அமெரிக்காவில் வாழும் இஸ்லாமியர் மற்றும் அரபுகளின் ஆதரவை மட்டுமன்றி காசா யுத்தம் காரணமாக அமெரிக்காவில் வாழும் அயர்லாந்தினரின் (Irish) ஆதரவையும் சனாதிபதி பைடென் வேகமாக இழந்து வருகிறார்.
இந்த அயர்லாந்தினர் இஸ்ரேல் பலஸ்தீனருக்கு செய்யும் கொடுமைகளை பிரித்தானியர் தமக்கு செய்த கொடுமைகளுடன் ஒப்பிடுகின்றனர்.
அயர்லாந்தே முதலில் பலஸ்தீனம் என்ற நாட்டை ஏற்றுக்கொண்ட ஐரோப்பிய நாடாகும். அயர்லாந்தில் சுமார் 80% மக்கள் இஸ்ரேல் காஸாவின் செய்வது genocide என்று கூறுகின்றனர்.
Irish Americans for Palestine என்ற அமைப்பு பலஸ்தீனர் ஆதரவு ஊர்வலங்களை செய்கின்றனர். காசாவில் உடனடி யுத்த நிறுத்தத்துக்கு அழைப்புவிடும் இவர்கள் இஸ்ரேலுக்கான பைடெனின் கண்மூடித்தனமான ஆதரவையும் கண்டிக்கின்றனர்.
St Pat’s for All Parade ஊர்வலமும் அவ்வாறே உள்ளது.