இந்திய பிரதமர் மோதியின் பா.ஜ. கட்சிக்கு $726 மில்லியன் (60 பில்லியன் இந்திய ரூபாய்கள்) இரகசிய நன்கொடை (anonymous donations) என்று இந்திய தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
2017ம் ஆண்டு மோதி அரசு electoral bonds என்ற அரசியல் கட்சிகளுக்கான நன்கொடை முறைமையை நடைமுறை செய்திருந்தது. இந்த முறைமை நன்கொடையை இரகசியமாக செய்ய வழிவகுக்கிறது. அதாவது நன்கொடை வழங்குபவரின் அல்லது வழங்கும் நிறுவனத்தின் பெயர் மறைத்து வைக்கப்படலாம்.
கடந்த மாதம் இந்திய உயர் நீதிமன்றம் electoral bonds முறைமை ஊழல்களுக்கு உடந்தையாகலாம் என்று கூறி இந்த முறைமையை தடை செய்திருந்தது. அத்துடன் State Bank of India நன்கொடை வழங்கியோரின் பெயர்களை பகிரங்கம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இந்த முறைமை மூலம் அதிகம் நன்கொடை செய்த Future Gaming and Hotel Services, Megha Engineering, Vedanta Group ஆகிய நிறுவனங்கள் பண கடத்தல் போன்ற காரணங்களுக்காக விசாரணையில் உள்ளன.
இந்திய காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறைமையில் கிடைத்தது 14 பில்லியன் ரூபாய்கள் மட்டுமே.