அடுத்த கிழமையளவில் இந்திய தேர்தல் திணைக்களம் இந்திய பொது தேர்தலுக்கான (Lok Sabha) தினத்தை அறிவிக்க இருக்கும் நேரத்தில் இந்திய தேர்தல் ஆணையாளர் Arun Goel திடீரென பதவி விலகியுள்ளார். இவரின் பதவி விலகலுக்கான காரணம் தெளிவாகவில்லை.
ஆனாலும் பிரதம ஆணையாளர் Rajiv Kumar க்கும் ஆணையாளர் Goel க்கும் இடையே பலத்த முரண்பாடு நிலவியதாகவும், அந்த முரண்பாடே Goel பதவி விலகலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த முரண்பாட்டுக்கு அரசியல் பின்னணி காரணமா அல்லது தனிப்பட்ட வேறுபாடு காரணமா என்பதுவும் அறியப்படவில்லை. Goel தனது பதவி விலகல் கடிதத்தை தன் திணைக்களத்துக்கு அனுப்பாது, இந்திய சனாதிபதிக்கு அனுப்பி இருந்தார்.
ஒரு Chief Election Commissioner மற்றும் இரண்டு Election Commissioner ஆக மொத்தம் 3 பேரை கொண்ட ஆணையாளர் குழுவில் ஏற்கனவே ஒரு ஆணையாளர் பதவி நிரப்பப்படாமல் இருந்தது. Goel பதவி விலகலின் பின் Rajiv Kumar என்ற Chief Election Commissioner மட்டுமே பதவியில் உள்ளார்.
தற்போது வெற்றிடமாக உள்ள இரண்டு தேர்தல் ஆணையாளர் பதவிகளும் வரும் தேர்தலுக்கு முன் நிரப்பப்படுவது மிகவும் கடினம்.