ரம்ப், பைடென் இறுதி போட்டிக்கு, பின்வாங்குகிறார் நிக்கி?

Super Tuesday என்று அழைக்கப்படும் இன்று செவ்வாய்க்கிழமை 16 மாநிலங்களில் இடம்பெற்ற Republican கட்சியின் உட்கட்சி தேர்தலில் முன்னாள் சனாதிபதி ரம்ப் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு எதிராக போட்டியிட்ட சீக்கிய வம்சம் வந்த நிக்கி ஹேலி Vermont மாநிலத்தில் மட்டும் வென்றுள்ளார்.

நிக்கி தான் Republican கட்சியின் உட்கட்சி போட்டியில் இருந்து நீங்குவதாக விரைவில் அறிவிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

அதேவேளை Democratic கட்சி சார்பில் ஏறக்குறைய எதிர்ப்பு இன்றி போட்டியிட்ட சனாதிபதி பைடென் வெற்றி பெற்றுள்ளார். அதனால் வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள அமெரிக்க சனாதிபதி தேர்தலில் பைடெனும், ரம்பும் மோதுவர்.

ரம்பின் மீள்வருகை நேட்டோ நாடுகளின் வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்துள்ளது. ரம்பின் முதல் ஆட்சி காலத்தில் “ரம்ப் போல் ஒரு நண்பன் இருக்க எங்களுக்கு எதிரி எதற்கு?” என்று தனது விசனத்தை தெரிவித்து இருந்தார் ஜெர்மன் அரசியல்வாதி ஒருவர்.