இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான ICICI வங்கியின் முகாமையாளர் ஒருவர் தான் அறிந்த வாடிக்கையாளர் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து $1.9 மில்லியன் (135 மில்லியன் இந்திய ரூபாய்கள்) பணத்தை திருடி உள்ளார்.
நீண்ட காலம் அமெரிக்காவில் வாழ்ந்த Shveta Sharma என்பவரும் அவரின் கணவரும் இந்தியாவுக்கு NRI (non-resident Indian) உரிமை பெற்று சென்றுள்ளனர். அமெரிக்காவில் வட்டி மிக குறைவு ஆனபடியால் அவர்கள் தமது சேமிப்பையும் கூடவே எடுத்து சென்றுள்ளனர்.
இதை அறிந்த நண்பர்கள் மூலம் அறிமுகமான ICICI வங்கி முகாமையாளர் ஒருவர் தனது கிளையில் முதலிட்டால் 5.5% முதல் 6.0% வட்டி தருவதாக கூறியுள்ளார். Sharma அந்த முகாமையாளரை நம்பி முழு சேமிப்பையும் ICICI கிளையில் 2019ம் ஆண்டு முதலீட்டனர்.
முதலிட்ட பணத்தை முகாமையாளர் படிப்படியாக தனது கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். Sharma இதை அறியாமல் இருக்க ICICI letterhead களில் பொய்யான மாதாந்த அறிக்கைகளை அனுப்பியுள்ளார்.
கணக்கை காலியாக்கியது மட்டுமன்றி முகாமையாளர் 25 மில்லியன் ரூபாய்கள் overdraft ம் எடுத்துள்ளார்.
திருட்டை ஏற்றுக்கொண்ட ICICI வங்கி 92.7 மில்லியன் ரூபாய்களை கணக்கில் வைப்பதாகவும் ஆனால் முகாமையாளருக்கு எதிரான வழக்கு முடியும்வரை கணக்கு முடக்கப்பட்டு இருக்கும் என்றும் கூறியுள்ளது. குறைந்த தொகையையும், முடக்கத்தையும் ஏற்றுக்கொள்ள Sharma மறுத்துள்ளார்.