காசாவில் உடனடியாக நிரந்தர யுத்த நிறுத்தத்தை நடைமுறை செய்ய கேட்டு அல்ஜீரியா இன்று ஐ.நா. பாதுகாப்பு சபையில் செய்த வாக்கெடுப்பை அமெரிக்கா veto வாக்கு மூலம் தடுத்து உள்ளது.
தாம் காசாவில் ஒரு தற்காலிக 6-கிழமை யுத்த நிறுத்தம் ஒன்றை நடைமுறை செய்ய முயற்சிகள் செய்வதாகவும் அல்ஜீரியாவின் நிரந்தர யுத்த நிறுத்த அழைப்பு தமது முயற்சியை குழப்பிவிடும் என்றும் அமெரிக்கா காரணம் கூறியுள்ளது.
மொத்தம் 15 உறுப்பினர்களில் 13 உறுப்பினர் நிரந்தர யுத்த நிறுத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்க அமெரிக்கா எதிராக வாக்களித்து உள்ளது. பிரித்தானியா வாக்களிக்கவில்லை.