அமெரிக்காவின் ஆளில்லா விண்கலம் ஒன்று 780 நாட்கள் பயணித்த பின் பாதுகாப்பாக தரை இறங்கி உள்ளது. X-37B என்ற இந்த விண்கலத்தின் 5 ஆவது பயணம் இதுவாகும். இதன் முதல் நான்கு பயணங்களில் இது முறையே 224, 469, 675, 718 நாட்கள் தொடர்ச்சியாக பயணித்து உள்ளது.
.
இந்த ஆளில்லா விண்கலம் இராணுவ நோக்கங்களுக்கே பயன்படுத்தப்படுவதாக கருதப்படுகிறது. பொதுவாக விண்ணுக்கு செலுத்தப்படும் கலங்கள் தொடர்பான தரவுகளை ஐ. நா. வுக்கு வழங்கும் முறைமை இருந்தாலும், X-37B ஏவல் தொடர்பாக அமெரிக்கா அறிவிப்பு எதையும் செய்திருக்கவில்லை.
.
உண்மை காரணம் தெரிவிக்கப்படாத நிலையில், இது எதிரிகளின் செய்மதிகளை வேவு பார்க்கலாம், ஆயுதங்களை கொண்டிருக்கலாம், மற்றைய செய்மதிகளை அழிக்கும் வல்லமை கொண்டிருக்கலாம் என்று பல ஊகங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
.
இந்த விண்கலம் சுமார் 30 அடி நீளமும், 15 அடி அகலமும் கொண்டதாகும். இது Low Earth Orbit (LEO) வழியே, சுமார் 2,000 km உயரத்தில், 28,044 km வேகத்தில் பூமியை வலம்வந்துள்ளது.
.