Aero India என்ற இந்தியாவின் விமான கண்காட்சி இந்த மாதம் 3ம் திகதி முதல் 5ம் திகதி வரை கர்நாடகா மாநிலத்து பங்களூர் நகரில் இடம்பெற்றது. அதில் அமெரிக்காவின் பிரதான குண்டுவீச்சு விமானமானங்களில் ஒன்றான B-1B விமானம் கலந்து கொண்டுள்ளது.
இந்த விமானமும் அதை பராமரிக்க 40 அமெரிக்க விமானப்படையினரும் North Carolina மாநிலத்து Ellsworth Air Force தளத்தில் இருந்து இந்தியா சென்று இருந்தனர்.
இதற்கு முன் 1945ம் ஆண்டே அமெரிக்க குண்டுவீச்சு விமானம் ஒன்று இந்தியா சென்று இருந்தது. அப்போது இந்தியா பிரித்தானியாவின் கட்டுப்பாடில் இருந்தது.
Cold-War காலத்தில் இந்த விமானத்தின் பார்வையில் சோவியத்துக்கு அடுத்ததாக இந்தியா இருந்தது. ஆனால் தற்போது முன்னைய எதிரிகள் நண்பர்கள் ஆகியது B-1B இந்தியா செல்ல வழி வகுத்தது.