அமெரிக்காவில் சுமார் 75% மக்கள் வீட்டுள் இருக்குமாறு பணிக்கப்பட்டு உள்ளனர். ஆனாலும் தற்போது அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானோர் தொகை சீனாவில் பலியானோர் தொகையிலும் அதிகமா உள்ளது.
.
அமெரிக்காவில் 181,099 பேர் கொரோனா தொற்றி உள்ளனர். அத்துடன் 3,606 பேர் கொரோனாவுக்கு பலியாகியும் உள்ளனர். குணமடைந்தோர் தொகை 6,038 மட்டுமே.
.
தற்போது Guam தீவில் தரித்து உள்ள அமெரிக்காவின் விமானம்தாங்கி கப்பலான USS Theodore Roosevelt யிலும் கொரோனா பரவி உள்ளது. அக்கப்பலில் உள்ள வைரஸ் தொற்றியோர் தொகை சட்டப்படி அறிவிக்கப்படவில்லை என்றாலும், தொகை 100 பேருக்கும் அதிகம் என்று செய்திகள் கூறுகின்றன. சுமார் 4,000 பேர் உள்ள கப்பல் போன்ற மிக சிறிய இடத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது கடினம்.
.
கொரோனா நேரடியாக தாக்கியோர் மட்டுமன்றி, பக்கவிளைவுகளும் தற்போது உக்கிரம் அடைய ஆரம்பித்து உள்ளன. தாய்லாந்தில் உல்லாச பயணிகளை மகிழ்வித்து வந்த ஆயிரக்கணக்கான யானைகளுக்கு, வருமானம் நின்றுபோனதால், உரிமையாளர் உணவு வழங்க முடியாது உள்ளனர். இந்த யானைகள் ஓவென்றுக்கும் நாள் ஒன்றுக்கு சுமார் 300 kg உணவு தேவை.
.
உலக அளவில் தற்போது குறைந்தது 846,156 கொரோனா தொற்றியும், 41,494 பலியாகியும் உள்ளனர். சுமார் 176,171 பேர் குணமடைந்தும் உள்ளனர்.
.