இலங்கையின் பொருளாதாரம் 2020ம் ஆண்டில் 3.6% வீழ்ச்சி அடைந்துள்ளது என்று கூறுகிறது வெள்ளிக்கிழமை வெளிவந்த இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை. கடந்த 73 ஆண்டுகளில் இதுவே மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி. இந்த வீழ்ச்சிக்கு கரோனா தொற்றும் ஒரு காரணம்.
கரோனாவுக்கு முன், 2019ம் ஆண்டில், இலங்கை 2.3% பொருளாதார வளர்ச்சியை கொண்டிருந்தது.
2020ம் ஆண்டில் இலங்கையின் கடனும் GDPயின் 101% ஆக இருந்துள்ளது. 2019ம் ஆண்டில் இலங்கையின் கடன் GDPயின் 86.8% ஆக மட்டுமே இருந்தது. இரண்டு கிழமைகளுக்கு முன் இலங்கை சீனாவிடம் இருந்து மேலும் $500 மில்லியன் கடன் பெற்று இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Asian Development Bank (ADB) இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டு (2021) 4.1% ஆல் வளரும் என்றும், 2020ம் ஆண்டில் அது 3.6% ஆல் வளரும் என்றும் கணிப்பிடுகிறது. ஆனால் கரோனா தொற்று தொடர்ந்தும் உக்கிரம் அடைந்தால் அந்த கணிப்புகள் பிழைக்கலாம்.