துருக்கியின் சனாதிபதி Recep Tayyip Erdogan அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பின்லாந்து, டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து, நியூ சிலாந்து, நோர்வே, சுவீடன் ஆகிய 10 நாடுகளின் தூதுவர்களை உடனடியாக துருக்கியை விட்டு வெளியேற்றுமாறு இன்று சனிக்கிழமை வெளியுறவு அமைச்சுக்கு கட்டளை இட்டுள்ளார்.
மேற்படி 10 நாடுகளில் 7 நாடுகள் NATO நாடுகள். ஒரு NATO நாடான துருக்கி 7 நேட்டோ நாடுகளின் தூதுவர்களை வெளியேற்றுவது சாதாரண விசயம் அல்ல. ஒரு NATO நாடு மீதான தாக்குதல், எல்லா NATO நாடுகள் மீதான தாக்குதலாகும் என்று NATO கூறுவது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. உலக யுத்தம் அளவிலான மேலும் ஒரு யுத்தம் உருவாக்கின், NATO நாடுகள் ஒரே அணையில் இருக்குமா என்பது தற்போது கேள்விக்குறியே.
சில தினங்களுக்கு முன் மேற்படி 10 நாடுகளும் துருக்கியில் கைது செய்யப்பட்டுள்ள Osman Kavala என்பவரை உடனடியாக விடுதலை செய்யும்படி கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தன. அதனாலேயே துருக்கி விசனம் கொண்டுள்ளது.
2016ம் ஆண்டு துருக்கியில் இடப்பெற்ற இராணுவ கவிழ்ப்பு முயற்சியில் Kavala வின் பங்கும் உள்ளது என்கிறது துருக்கி. ஆனால் 2017ம் ஆண்டு துருக்கியில் இடம்பெற்ற வழக்கு Kavala குற்றவாளி அல்ல என்று கூறியிருந்தது. இருப்பினும் பின் இடம்பெற்ற வழக்கு Kavala குற்றவாளி என்று தீர்ப்பு கூறியிருந்தது.