கடந்த ஆண்டு சுமார் $68,789 பெறுமதியை கொண்டிருந்த bitcoin ஒன்று இன்று சுமார் $29,400 பெறுமதியை கொண்டுள்ளது. அதாவது சுமார் 57% ஆல் bitcoin தனது பெறுமதியை இழந்து உள்ளது.
Bitcoin மட்டுமன்றி ethereum போன்ற ஏனைய crypto நாணயங்களும் தமது பெறுமதியை பாரிய அளவில் இழந்து உள்ளன. கடந்த வெள்ளிக்கும் இந்த கிழமை திங்களுக்கும் இடையில் Bitcoin, Ethereum, BNB, XRP, Solana, Cardano, Luna ஆகிய அனைத்து crypto நாணயங்களும் கூட்டாக சுமார் $400 பில்லியன் பெறுமதியை இழந்து உள்ளன.
Coinbase என்ற bitcoin கையாளும் நிறுவனம் இந்த ஆண்டில் மட்டும் 75% பங்கு சந்தை பெறுமதியை இழந்து உள்ளது. இந்நிலை தொடர்ந்தால் Coinbase நிறுவனம் bankruptcy ஆகலாம்.