கடந்த திங்கள் அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் வீதியால் சென்று கொண்டிருந்த 65 வயது Vilma Kari என்ற பெண்ணை காரணம் எதுவும் இன்றி ஒரு வெள்ளையின துவேசம் கொண்டவன் தாக்கி இருந்தான். அந்த தாக்குதலை செய்த Brandon Elliot என்ற 38 வயதுடையவன் 2002ம் ஆண்டு தனது தாயை கத்தியால் வெட்டி கொலை செய்திருந்தவன் என்று அறியப்படுகிறது.
Vilma Kari பிலிப்பீன் நாட்டில் இருந்து அமெரிக்கா வந்தவர் என்றும் அவரை Brandon சீன பெண் என்று கருதியே தாக்கியதாக கூறப்படுகிறது. இவ்வாறு பல பிலிப்பீன், வியட்நாம் போன்ற நாட்டவர் சீனர் என்று கருதப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.
Brandon சுமார் 20 ஆண்டுகளுக்கு முன், 19ம் வயதில், தனது தாயை கொலை செய்தவன். சிறையில் இருந்த அவன் 2019ம் ஆண்டு முதல் கண்காணிப்பின் கீழ் விடுதலை (lifetime parole) செய்யப்பட்டு இருந்தான்.
Vilma அங்குள்ள கிறீஸ்தவ தேவாலயம் ஒன்றுக்கு செல்கையிலேயே “you don’t belong here ” என்று கூறி Brandon தங்கியுள்ளான். தனது காயங்களுக்கு வைத்தியம் பெற்ற Vilma செவ்வாய்க்கிழமை வீடு சென்றுள்ளார்.
இந்த ஆண்டு மட்டும் நியூயார்க் நகரில் 33 இவ்வகை சீன விரோத தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.