63 ஆண்டுகளுக்கு பின் இலங்கையில் 2.1% பணச்சுருக்கம்

63 ஆண்டுகளுக்கு பின் இலங்கையில் 2.1% பணச்சுருக்கம்

நவம்பர் மாதம் இலங்கையின் பணச்சுருக்கம் (deflation) 2.1% ஆக உள்ளது என்று இன்று சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இந்த அளவு பணச்சுருக்கம் சுமார் 63 ஆண்டுகளின் பின் ஏற்பட்டுள்ளது.

2022ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற 70% பணவீக்கத்துடன் (inflation) ஒப்பிடுகையில் 2.1% பணச்சுருக்கம் மிக பெரிதல்ல என்றாலும் பொருட்களின் விலை மெல்ல குறைய ஆரம்பித்து உள்ளது என்பதை இது காட்டுகிறது.

செப்டம்பர் மாத பணச்சுருக்கம் 0.5% ஆகவும், அக்டோபர் மாத பணச்சுருக்கம் 0.8% ஆகவும் மட்டுமே இருந்தன. எரிபொருள் விலை சரிவு போக்குவரத்து மற்றும் காவு கூலி சரிவு ஆகியவற்றுக்கு காரணமாகிறது. எரிபொருள் சரிவால் ஏற்பட்ட மின்சார கட்டண குறைப்பும் பாரிய பணச்சுருக்கம் ஏற்பட காரணம். 

இலங்கை நாணய பெறுமதி அதிகரிப்பதும் இலங்கைக்கு சாதகமாக உள்ளது. 2023ம் ஆண்டு அமெரிக்க டாலர் ஒன்றை கொள்வனவு செய்ய சுமார் 360 இலங்கை ரூபாய்கள் தேவைப்பட்டது. ஆனால் தற்போது சுமார் 291 ரூபாய்கள் மட்டுமே தேவை.

மேலும் பல மாதங்களுக்கு பணச்சுருக்கம் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.