இலங்கையின் Public Security அமைச்சர் புதிதாக மேலும் 50 கடவுச்சீட்டு விண்ணப்ப உள்வாங்கல் அலுவலகங்களை ஆரம்பிக்க உள்ளதாக கூறியுள்ளார்.
தற்போது கடவுச்சீட்டு பெற பல மாதங்கள் செலவாகுவதால் சிலர் மேசைக்கு கீழால் பணம் வழங்கி வரிசையில் முந்திக்கொள்கின்றனர். அண்மையில் 16 பேர் இவ்வகை இலஞ்சம் காரணமாக கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கடவுச்சீட்டு வைத்திருப்பவரின் விபரங்கள் மட்டுமே இலங்கையில் வைத்து பதியப்படுகின்றன. கடவுச்சீடு வெளிநாடுகளில் தயாரிக்கப்படுகின்றன.
2022ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தோனேசியாவின் Peruri என்ற நிறுவனம் இலங்கைக்கான கடவுச்சீட்டுகளை தயாரிக்கும் பணியை பெற்று இருந்தது. Peruri மொத்தம் 1 மில்லியன் கடவுச்சீட்டுகளை $2.1 மில்லியனுக்கு தயாரிக்க இணங்கி இருந்தது. அதவாது ஒரு புத்தகத்துக்கு $2.1 டாலர்.
Peruri சுமார் 20 ஆண்டுகளாக இலங்கை கடவுச்சீட்டை தயாரிக்கிறது. இந்த நிறுவனம் வேறுசில நாடுகளின் நாணய தாள்களையும் அச்சடிக்கிறது.