$5 மில்லியனுக்கு ரம்பின் அமெரிக்க Gold Card

$5 மில்லியனுக்கு ரம்பின் அமெரிக்க Gold Card

சனாதிபதி ரம்ப் $5 மில்லியனுக்கு அமெரிக்க Gold Card விற்பனை செய்யப்படவுள்ளது என்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். இந்த Gold Card அமெரிக்காவின் Green Card கொண்டுள்ள உரிமைகளை கொண்டிருக்குமாம்.

புதிய Gold Card வழங்கல் இரண்டு கிழமைகளில் ஆரம்பமாகும் என்று ரம்ப் கூறினாலும் அது சாத்தியமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். ரம்ப் முன் பின் யோசனை செய்யாது வாய்க்கு வந்தபடி கூறி, பின் அந்த கூற்றுகளை மறந்துவிடுபவர்.

ரஷ்யாவின் செல்வந்தர்களும் இந்த Gold Card ஐ கொள்வனவு செய்யலாம் என்று ரம்ப் கூறியுள்ளார்.

1990ம் ஆண்டு அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட EB-5 Immigrant Investor Visa விசா இவ்வகை விசாவே. EB-5 விசா குறைந்தது 10 முழுநேர வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற நிபந்தனையை கொண்டது.

2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை EB-5 விசாவுக்கு 78,278 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களில் அதிகமானோர் சீனா, தென் கோரியும் தாய்வான், பிரித்தானியா ஆகிய நாட்டவர். 2014ம் ஆண்டு EB-5 விசா பெற்றவர்களில் 85% மானோர் சீனர்கள்.