சில காலத்துக்கு முன் பங்கு சந்தையில் (stock market) $47 பில்லியன் பெறுமதி கொண்டிருந்த WeWork என்ற அமெரிக்க நிறுவனம் கடன் தொல்லையால் முறிந்துள்ளது. நேற்று திங்கள் இந்த நிறுவனம் அமெரிக்காவில் Chapter 11 bankruptcy க்கு பதிவு செய்துள்ளது.
2021ம் ஆண்டு பங்கு சந்தைக்கு வந்திருந்த இந்த நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை ஆரம்பத்தில் $520.00 வரையில் இருந்தது. ஆனால் இன்று அந்த பங்கு ஒன்றின் விலை $0.80 சதமாக உள்ளது. அதனால் ஏறக்குறைய $47 பில்லியன் புத்தக பெறுமதியை அது இழந்துள்ளது.
இந்த நிறுவனத்தில் முதலீட்டோர் தமது பணத்தை ஏற்றாக்குறை முற்றாக இழக்கின்றனர்.
WeWork நிறுவனத்தில் ஜப்பானின் SoftBank என்ற முதலீட்டு நிறுவனமும் பெருமளவு முதலீடு செய்துள்ளது.
அலுவலக இடங்களை வாடகைக்கு விடும் WeWork அண்மையில் மொத்தம் 39 நாடுகளில் 777 வாடகை அலுவலக நிலையங்களை கொண்டிருந்தது.