2004 ஆம் ஆண்டு முதல் பல வருட பேச்சுவார்த்தைகளின் பின் சீனாவும் ரஷ்யாவும் சுமார் $400 பில்லியன் பெறுமதியான 30-வருட எரிவாயு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து இட்டுள்ளதாக ரஷ்யாவின் ITAR-TASS செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. Ukraine விவகாரங்கள் காரணமாக ரஷ்யாவை பொருளாதரத்தில் தனிமைப்படுத்த அமெரிக்காவும் ஐரோப்பாவும் முனையும் இக்காலத்தில் சீனாவின் எரிவாயு வர்த்தகம் ரஷ்யாவுக்கு வர்த்தக பலத்தை அளித்துள்ளது.
இந்த உடன்படிக்கைப்படி முதல் கட்ட எரிவாயு 2018 ரஷ்யாவின் Kovyktinskoye மற்றும் Chayandinskoye பகுதிகளில் இருந்து சீனாவுக்கு குழாய்கள் மூலம் எடுத்துச்செல்லப்படும். அத்துடன் ரஷ்யாவுக்குள் தேவையான குழாய்களை ரஷ்யா அமைக்கும், சீனாவுக்குள் தேவையான குழாய்களை சீனா அமைக்கும். ஒவ்வொரு வருடமும் சுமார் 38 பில்லியன் சதுர மீட்டர் எரிவாயு சீனாவுக்கு செல்லும்.
இந்த ஒப்பந்தம் பகிரங்கப்படுத்தப்பட்டு இருந்தாலும் எரிவாவுவின் விற்பனை விலை அறிவிக்கப்படவில்லை. ஆனால் சீனாவிடம் அறவிடப்படும் விலை ஐரோப்பிய நாடுகளில் அறவிடப்படும் விலையைவிட குறைவானதாகவே இருக்கும் என கருதப்படுகிறது.
ரஷ்யாவின் தலைவர் பூட்டின் தற்போது CICA நிகழ்வுகளில் பங்குகொள்ள சென்றுள்ளபோதே இந்த உடன்படிக்கை கையொப்பம் இடப்பட்டது.