விபத்துக்களின் போது சாரதிகளை பாதுகாப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டதே Air Bag. விபத்து இடம்பெறும்போது Air Bag தனது கொள்கலத்தில் இருந்து வெடித்து ஒரு வாயு நிரம்பிய Bag ஒன்றை உருவாக்கும். அது சாரதியின் தலை கடின பாகங்களில் அடிபடுவதை தவிர்க்கும். ஆனால் இந்த Air Bag சில சாரதிகள் மரணமாக காரணமாகி உள்ளது,
.
.
ஜப்பானின் Takata நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட Air Bagகுகளே இப்போது விசாரணைக்கு உள்ளாகியுள்ளன. அமெரிக்காவில் இது 6 மரணங்களுக்கும் சுமார் 100 படுகாயங்களுக்கும் காரணமாகி உள்ளது. இந்த Air Bag வெடிக்கும் போது வீசப்படும் சில பாகங்கள் உருவாக்கும் காயங்களே இதற்கு காரணம்.
.
.
Takata Air Bag வடிவமைப்பு குறைபாடு காரணமாக சுமார் 34 மில்லியன் வாகங்கள் திருப்பி அழைக்கப்பட்டுள்ளன. சுமார் 30% உலக Air Bag குகள் Takata நிறுவனத்தால் செய்யப்பட்டதே.
.
Honda, Toyota, Ford களே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் National Highway Traffic Safety Administration மேற்கொண்ட விசாரணையின் இறுதியிலேயே இந்த மீளப்பெறல் நடவடிக்கைகள் ஆரம்பமாகி உள்ளன.