34 மணித்தியாலத்துள் 39 C ஆல் வீழ்ச்சி

USFlag

புதன்கிழமைக்கும் வியாழக்கிழமைக்கும் இடைப்பட்ட 34 மணி நேரத்துள் அமெரிக்காவின் Denvor நகரில் வெப்பநிலை சுமார் 39 C ஆல் வீழ்ந்துள்ளது. அமெரிக்காவின் Colorado மாநிலத்து டென்வேர் (Denver) என்ற நகரில் புதன் பிற்பகல் 83 F (28.33 C) ஆக இருந்த வெப்பநிலை வியாழன் இரவு 13 F (- 10.55 C) ஆக வீழ்ந்துள்ளது.
.
இங்கு இடம்பெற்ற பாரிய இருநாள் வெப்பநிலை வீழ்ச்சியில் இது இரண்டாம் இடத்தில் உள்ளது.
.
2018 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதமும் இங்கு வெப்பநிலை 58 F (14.44 C) யில் இருந்து – 18 F (-27.78 C ) க்கு வீழ்ந்து இருந்தது. அதாவது அங்கு வெப்பநிலை 42.22 C ஆல் வீழ்ந்திருந்தது. இந்த வீழ்ச்சியே பதிவில் உள்ள மிக பெரிய வீழ்ச்சியாகும்.
.
வடக்கே இருந்து தள்ளப்பட்ட இந்த குளிர் படிப்படியாக ரெக்சஸ் (Texas) மாநிலம் வரை தள்ளப்பட்டது. இங்கு வியாழன் 90 F (32.2 C) வரையில் இருந்த வெப்பநிலை, வெள்ளி அதிகாலையில் 40 F (4.4 C) வரைக்கு குறைந்து உள்ளது.