மொராக்கோ நாட்டில் 5 வயது Rayan Awram என்ற சிறுவன் மிக ஆழமான குழாய் கிணறு ஒன்றுள் வீழ்ந்து 32 அடி ஆழத்தில் இறுகி இருந்தான். இவன் வீழ்ந்தது கடந்த செவ்வாய்க்கிழமை. அவனை மீட்க வேகமாக நடவடிக்கைகள் எடுத்தாலும் இன்று சனிக்கிழமை அவன் உடலே கிடைத்துள்ளது.
இவனை மீட்க பாரிய கிடங்கு கிண்டும் இயந்திகள் பயன்படுத்தப்பட்டாலும் சிறுவன் இருந்த ஆழத்தை அடைய சுமார் 5 நாட்கள் எடுத்துள்ளது. காற்று, உணவு, நீர் ஆகியன மேலே இருந்து அனுப்பப்படாலும் மீட்ட நேரத்தில் சிறுவனின் உடலே கிடைத்துள்ளது.
இந்த குழாய் கிணறு நில மட்டத்தில் 18 அங்குல (1.5 அடி) விட்டத்தை கொண்டிருந்தாலும் அடியில் விட்டம் அதிலும் குறைவாக இருந்துள்ளது.
சுமார் 500 பேர் வாழும் இந்த வறிய பகுதியில் பல குழாய் கிணறுகள் உள்ளன. பல கிணறுகள் பாதுகாப்பு மூடிகளை கொண்டிருந்தாலும், இந்த கிணறு மூடியை கொண்டிருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.