315 நாட்களாக மின்கம்பத்தில் Samsung எதிர்ப்பு போராட்டம்

Kim_Yong-hee

தென்கொரியாவில் உள்ள Samsung தலைமையகத்தின் முன் உள்ள மின்கம்பம் ஒன்றில் ஏறி அந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் போராட்டம் செய்து வருகிறார். தற்போது 61 வயதுடைய Kim Yong-hee என்பவரே இவ்வாறு 25 மீட்டர் உயரமான மின்கம்பம் ஒன்றில் நிலைகொண்டு கடந்த 315 நாட்களாக போராடி வருகிறார்.
.
முன்னாள் Samsung ஊழியரான Kim Yong-hee அந்த நிறுவனத்துள் தொழிலாளர் சங்கம் (labor union) அமைக்க முயன்றுள்ளார். அதை விரும்பாத Samsung பொய் காரங்கள் கூறி 1995 ஆம் ஆண்டில் அவரை பணியில் இருந்து நீக்கி இருந்தது. அன்று முதல் கடந்த 25 ஆண்டுகளாக Kim Yong-hee தான் பணிபுரிந்த Samsung நிறுவனத்துக்கு எதிராக போராடியும், வழக்குகள் தொடர்ந்தும் வருகிறார். தனது தொழிலை மீண்டும் வழங்கி, நட்ட ஈடும் வழங்கி, மன்னிப்பும் கூறவேண்டும் என்கிறார் அவர்.
.
கடந்த வருடம் ஜூன் மாதம் 10 ஆம் திகதி இவர் Gangnum பகுதியில் உள்ள Samsung நிறுவன தலைமையகத்தின் முன் உள்ள CCTV கருவிகள் உள்ள மின்கதில் ஏறிய இவர் அங்கிருந்து சுமார் 315 தினங்களாக போராடி வருகிறார்.
.
தென்கொரியாவின் மிகப்பெரிய நிறுவனமான Samsung பலத்த அரசியல் ஆதரவு கொண்டது. அதற்கு எதிராக போராடுவது இலகல்ல. ஆனாலும் பல Samsung அதிகாரிகள் நீதிமன்றங்ககளில் குற்றம் காணப்பட்டும், சிலர் சிறை சென்றும் இருந்தனர்.
.
Samsung நிறுவனத்தின் இரண்டாம் இடத்தில் இருந்த Lee Sang-hoon ஊழல் காரணமாக 6 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று இருந்தவர்.
.
பின்னர் Lee Kun-hee என்ற உயர் அதிகாரி இரண்டு தடவைகள் குற்றாவளியாக காணப்பட்டு இருந்தார். ஆனால் அவர் என்றைக்கும் சிறை சென்றதில்லை.
.
Lee Kun-hee க்கு பின் பதவிக்கு வந்திருந்த அவரின் மகன் Lee Jae-Yong 2017 ஆம் ஆண்டு ஊழல் காரணமாக சிறைக்கு சென்று இருந்தார். இவரின் ஊழலுடன் தொடர்பு கொண்டிருந்த அக்கால சனாதிபதி Park Geun-hye அரசியலில் இருந்து விரட்டப்படார்.
.