1900ம் ஆண்டுகளின் ஆரம்ப காலத்தில் ஆபிரிக்காவை ஆக்கிரமித்திருந்த ஜேர்மன் படைகளால் 300,000 மாஜி மாஜி (Maji Maji) இனத்தவர் படுகொலை செய்யப்பட்டமைக்கு இன்று ஜேர்மன் சனாதிபதி மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஜேர்மன் சனாதிபதி Frank-Walter Steinmeier Songea என்ற இடத்தில் தெரிவித்த தனது கூற்றிலேயே இந்த மன்னிப்பை கேட்டுள்ளார்.
மாஜி மாஜி இனத்தவர் ஜேர்மன் ஆக்கிரமிப்புக்கு எதிராக கிளர்ச்சி செய்தபோதே இந்த படுகொலைகள் இடம்பெற்றன. Songea Mbano என்ற மாஜி மாஜி தலைவர் 1906ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
மாஜி மாஜி இனத்தவரை அடிமைகளாக்கி ஜேர்மன் பருத்தி உற்பத்தியை செய்திருந்தது.
தற்கால தான்சானியா, றவாண்டா, புருண்டி, மொசாம்பிக் ஆகிய இடங்களை German East Africa ஆக ஜேர்மன் ஆக்கிரமித்து இருந்தது.
அக்காலத்தில் உலக சனத்தொகை சுமார் 1 பில்லியன் மட்டுமே. இன்று உலக சனத்தொகை சுமார் 9 பில்லியன். அதனால் அன்றைய 300,000 சனத்தொகை இன்று 2.7 மில்லியனுக்கு நிகரானது.
நமீபியாவில் (Namibia) செய்த படுகொலைகளுக்கு 2021ம் ஆண்டு ஜேர்மன் மன்னிப்பு கேட்டிருந்தது.