கடந்த 3 தினங்களாக அமெரிக்க House Speaker பதவிக்கான வாக்கெடுப்பு அமெரிக்க காங்கிரசின் House அவையில் 11 தடவைகள் இடம்பெற்றன. இங்கே போட்டி Republican கட்சிக்குள் மட்டுமே என்றாலும் Speaker பதவிக்க எவரும் தெரிவு செய்யப்படவில்லை. அந்த வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை நாலாவது தினமும் தொடர்கிறது.
Republican கட்சியே House அவையில் அதிக ஆசனங்களை கொண்டுள்ளது. ஆனால் பெரும்பாலான Republican உறுப்பினர் விரும்பும் Kevin McCarthy என்பவருக்கு ஆதரவு வழங்க அதே கட்சியை சார்ந்த 20 கடும்போக்கு உறுப்பினர் மறுக்கின்றனர். அனைத்து House உறுப்பினரும் வாக்களித்தால் வெற்றி அடைய குறைந்தது 218 வாக்குகள் தேவை.
McCarthy இதுவரை பெற்ற அதிகூடிய வாக்குகள் 203 மட்டுமே.
House Speaker தெரிவு செய்யப்பட்ட பின்னரே ஏனைய புதிதாக தெரிவு செய்யப்பட்ட House உறுப்பினர் பதவி ஏற்பு செய்யலாம். அதன் பின்னரே House சட்டங்களை மாற்றலாம், இயற்றலாம்.
தற்போதைய House வாக்கெடுப்பு அமெரிக்காவின் Civil War காலத்துக்கு வாக்கெடுப்புக்கு ஒத்ததாக உள்ளது. சுமார் 164 ஆண்டுகளுக்கு முன்னரும் இன்றைய நிலை இருந்துள்ளது.
Democratic கட்சியிடம் 212 ஆசனங்கள் மட்டுமே உள்ளன. அதனால் அந்த கட்சி Speaker பதவியை அடைய முடியாது. Republican கட்சியிடம் 222 ஆசனங்கள் உண்டு.
ஒரு உறுப்பினர் ‘present’ என்று வாக்களித்தால் அவர் எவரையும் ஆதரிக்கவில்லை என்று பொருள்படும்.