கடந்த 3 ஆண்டுகளில் சீனா தனது அணு ஆயுதங்களின் தொகையை 35% ஆல் அதிகரித்து உள்ளது என்கிறது ஆய்வு அறிக்கை ஒன்று. The Bulletin of the Atomic Scientists என்ற ஆய்வு அறிக்கையே வியாழக்கிழமை தனது அறிக்கையில் மேற்படி தரவை வெளியிட்டு உள்ளது.
சீனாவிடம் தற்போது 40 அணுவாயுத brigades உள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. அதில் சுமார் அரைப்பங்கு நிலத்தில் இருந்து ஏவப்படும் அணு ஆயுதங்களை கொண்ட ballistic மற்றும் cruise ஏவுகணைகள் ஆகும்.
மொத்தம் 40 brigade களில் 12 brigades கிழக்கு மற்றும் தெற்கு பிரிவுகளில் (theater commands) உள்ளது. இந்த இரண்டு பிரிவுகளுமே தாய்வானை நோக்கியவை.
மேற்படி அறிக்கையின்படி சீனா தற்போது 350 அணு ஆயுதங்களை கொண்டுள்ளது. அத்துடன் அந்த தொகை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.