270 இந்தியர்களை வெளியேற்ற அமெரிக்கா முயற்சி

India-US

அமெரிக்காவில் தங்கியிருக்கும் சுமார் 270 இந்தியர்களை அமெரிக்கா திருப்பி அனுப்ப முனைகிறது. கடந்த அமெரிக்க அரசுகள் இவ்விடயத்தில் அக்கறை கொண்டிருக்கவில்லை என்றாலும், தற்போதைய டிரம்ப் அரசு இவர்களை இந்தியாவுக்கு அனுப்பும் முயற்சியில் மும்மரமாக ஈடுபட்டு உள்ளது.
.
இவர்களில் பலர் பல்வேறு விசாகளின் மூலம் அமெரிக்கா வந்து, பின்னர் விசா முடிவின்போது நாடு திரும்பாமல் அமெரிக்காவிலேயே தாங்கியவர் ஆவர்.
.
Pew Research Center என்ற ஆய்வு அமைப்பின் 2016 ஆண்டு கருத்துப்படி சுமார் 500,000 இந்தியர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி உள்ளனர். இவர்களுள் சுமார் 20,000 இந்தியர் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு, அப்போது அவர்களின் சட்டவிரோத தங்கல் அறியப்பட்டு, நாடுகடத்தப்படும் நிலையில் உள்ளனர். இவர்களின் குற்றங்களுள் பாரதூர குற்றங்களில் இருந்து, வீதி சட்டங்களை மீறிய குற்றங்கள் வரை பல்வேறு குற்றங்களும் அடங்கும். இவர்களுள் 270 பேர் தற்போது உடனடி நாடுகடத்தலுக்கு அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
.
ஆனால் எல்லாரையும் உடனடியாக ஏற்க இந்தியா விருப்பவில்லை. பதிலாக ஒவ்வொரு விடயத்தையும் ஆராய்ந்தே இந்தியா முடிவு செய்யவுள்ளது. இந்தியா உரிய பயண பத்திரங்கள் வழங்காமல் அமெரிக்கா மேற்படி நபர்களை நாடு கடத்த முடியாது.
.

இந்திய வெறியுறவு செயலாளர் Sushma Swaraj இதுபற்றி இந்திய பாராளுமன்றத்தில் கடந்த வியாழன் கருத்து தெரிவித்து உள்ளார். தனது கருத்தில் அவர் “Until we verify the nationalities of these people, how do we believe the claim in the list” என்றுள்ளார். அமெரிக்காவிடம் மேலதிக விபரங்களை கேட்டுள்ளதாக Sushma கூறியுள்ளார்.
.