27 ஆண்டுகளின் பின் டெல்லி அரசு பா.ஜ கட்சி கையில் 

27 ஆண்டுகளின் பின் டெல்லி அரசு பா.ஜ கட்சி கையில் 

இந்தியாவின் தலைநகர் உள்ள டெல்லி அரசு 27 ஆண்டுகளுக்கு பின் மோதி தலைமையிலான பா.ஜ கட்சி கையில் வீழ்ந்துள்ளது. மொத்தம் 70 ஆசனங்களில் பா.ஜ. 47 ஆசனங்களை கைப்பற்றுகிறது.

பா.ஜ. கட்சி டெல்லி ஆட்சியை 1998ம் ஆண்டு இழந்திருந்தது.

இதுவரை டெல்லியை ஆண்டுவந்த AAP கட்சி இம்முறை 23 ஆசனங்களை மட்டுமே பெறுகிறது. 2013ம் ஆண்டு முதல் இன்றுவரை AAP கட்சியே டெல்லியை ஆட்சி செய்து வந்திருந்தது.

AAP கட்சி தலைவர் Arvind Kejriwal வெற்றி அடையவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக Kejriwal ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்றவர். தற்போது இவர் பிணையில் வெளிவந்தாலும் முதலமைச்சர் பதவியை கொண்டிருக்க முடியாது.

தேசிய அளவில் இரண்டாவது பெரிய கட்சியான காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் பெறாது என்று கணிக்கப்படுகிறது. 1998ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டுவரை காங்கிரசே டெல்லியை ஆட்சி செய்திருந்தது.