25 அமெரிக்க நகரங்களில் ஊரடங்கு உத்தரவு

Derek_Chauvin

குறைந்தது 25 அமெரிக்க நகரங்களில் சனிக்கிழமை இரவு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 16 மாநிலங்களில் உள்ள இந்த நகரங்களுள் Atlanta, Charleston, Chicago, Cincinnati, Cleveland, Denver, Los Angeles, Nashville, Philadelphia, Pittsburgh, Miami, Minneapolis, Seattle ஆகியனவும் அடங்கும்.
.
Minneapolis நகரம், Los Angeles நகரம், Georgia மாநிலம் ஆகிய இடங்களில் National Guard படையினர் பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.
.
Indianapolis என்ற நகரில் மூவர் சுடப்பட்டு, ஒருவர் பலியாகியும் உள்ளார்.
.
Jacksonville நகரில் போலீசார் ஒருவர் கழுத்தில் வெட்டப்பட்டு உள்ளார். அவர் தற்போது வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
.
வன்முறைகள் காரணமாக Target என்ற விற்பனை நிறுவனம் 175 இடங்களில் உள்ள நிலையங்களை தற்காலிகமாக மூடி உள்ளது.
.
George Floyd என்ற கைவிலங்குடன் கட்டுப்பாடில் இருந்த கருப்பு இனத்தவர் ஒருவரை வெள்ளை இன போலீசார் கேமுழங்காலால் நெரித்து கொன்றமையே மேற்படி ஆர்பாட்டங்களுக்கு காரணம்.
.