பின்னாளில் பிரித்தானியாவின் உளவாளியாக மாறிய முன்னாள் ரஷ்ய உளவாளி Sergei Skripal (double-agent) என்பவரை இரசாயன ஆயுதம் கொண்ட தாக்கியதற்கு பதிலடியாக அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஜேர்மனி உட்பட 24 நாடுகள் தம் நாட்டில் நிலைகொண்டிருந்த 140 ரஷ்ய தூதுவராலய ஊழியர்களை தமது நாடுகளில் இருந்து வெளியேற்றி உள்ளன.
.
.
பிரித்தானியாவே முதலில், மார்ச் மாதம் 4ஆம் திகதி, அங்கிருந்து பல ரஷ்ய அதிகாரிகளை வெளியேற்றி இருந்தது. பல நாடுகள் நேற்று திங்கள் இந்த வெளியேற்ற நடவடிக்கைகளை நடைமுறை செய்தன.
.
NATO அதன் செயல்பாடுகளை கண்காணிக்கவென நிலைகொண்டிருந்த 7 ரஷ்ய அதிகாரிகளை வெறியேற்றுவதாகவும் இன்று செய்வாய் கூறியுள்ளது. அத்துடன் மேலும் மூவரின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும் என்றும் NATO கூறியுள்ளது.
.
.
ரஷ்யாவின் சிறையில் இருந்த ரஷ்ய உளவாளி Skripal முன் இடம்பெற்ற உளவாளிகள் கைமாற்றம் ஒன்றின் மூலம் பிரித்தானிய சென்றிருந்தார். அப்போதே அவரும், அவரின் மகளும் இரசாயன ஆயுத தாக்குதலுக்கு உள்ளானார்கள். Novichok என்ற இந்த இராணுவ தர இரசாயன ஆயுதம் 1970களில் சோவித் யூனியனால் தயாரிக்கப்பட்டது.
.