அமெரிக்காவில் தங்கியிருந்து இராணுவ பயிற்சிகளை பெற்றுவந்த 21 சவுதி படையினரை அமெரிக்கா வெளியற்றுகிறது. இந்த அறிவிப்பை அமெரிக்கா இன்று திங்கள் வெளியிட்டு உள்ளது.
.
டிசம்பர் 6 ஆம் திகதி அமெரிக்காவில் பயிற்சி பெற்று வந்த இன்னோர் சவுதி படையினன் 3 அமெரிக்க படையினரை கொலை செய்து, 8 பேரை காயப்படுத்தியற்கும் இன்று வெளியேற்றப்படும் 21 பேருக்கும் இடையில் தொடர்பு எதுவும் இல்லை என்றாலும், மேற்படி 21 பேரும் ஆயுத குழுக்களின் (jihadist) பிரச்சார பிரதிகளை கொண்டிருந்தனர் என்று கூறுகிறது அமெரிக்கா.
.
சவுதி ஒரு நட்பு நாடு என்று அமெரிக்கா அரசியல்வாதிகள் கூறினாலும், சாதாரண சவுதி படைகளை அமெரிக்கா நம்ப முடியாமல் உள்ளது.
.
நீண்ட காலமாக அமெரிக்கா சவுதி படைகளுக்கு அமெரிக்காவில் பயிற்சி வழங்கி வருகிறது. 1995 ஆம் ஆண்டு முதல் சவுதி வான் படையினர் அமெரிக்காவில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
.