2049ம் ஆண்டளவில் சீனாவின் கடற்படை அமெரிக்க கடற்படைக்கு நிகரான வளர்ச்சியை கொண்டிருக்கும் என்று Russian International Affairs Council (RIAC) என்ற ஆய்வு அமைப்பு கூறியுள்ளது. அத்துடன் ரஷ்யா சீனாவின் வழிமுறைகளை பின்பற்றி வளரவேண்டும் என்றும் கேட்டுள்ளது RIAC.
People’s Republic of China என்ற சீன கொம்யூனிஸ்ட் கட்சி 2049ம் ஆண்டு சீனாவை 100 ஆண்டுகள் ஆட்சி செய்தமையை கொண்டாடும்.
சீனா தனது GDP யின் 1.5% மட்டுமே தற்போது தனது இராணுவத்தில் செலவிடுகிறது. இதே காலத்தில் அமெரிக்கா 3.5% GDP யை இராணுவத்தில் செலவிடுகிறது. அதாவது சீனா தனது இராணுவ செலவை இரண்டு மடங்களுக்கு மேலாக அதிகரிக்க இடமுண்டு.
தற்போது ரஷ்யாவிடம் 4,380 அணு குண்டுகளும், அமெரிக்காவிடம் 3.708 அணு குண்டுகளும், சீனாவிடம் 500 அணு குண்டுகளும் உள்ளன. ஆனால் 2035ம் ஆண்டளவில் சீனா சுமார் 1,500 அணு குண்டுகளை கொண்டிருக்கும் என்கிறது RIAC.
சீனா அண்மையில் சேவைக்கு விட்டிருந்த யுத்த கப்பல்களும், அணுமின் நீர்மூழ்கிகளும் அமெரிக்காவின் தரத்துக்கு நிகரானவை என்றும் RIAC கூறியுள்ளது.
நேற்றைய தினம் சீனாவின் DeepSeek என்ற AI நிறுவனம் அமெரிக்காவுக்கு வழங்கிய அதிர்ச்சி ஒரு “wake-up call” என்று சனாதிபதி ரம்ப் கூறியிருந்தார். இந்த DeepSeek நிறுவனம் சுமார் ஒரு ஆண்டுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டது.