இன்று சனிக்கிழமை ரஷ்யாவின் சனாதிபதி பூட்டின் (Vladimir Putin) ஒப்பமிட்டுள்ள சட்டம் ஒன்று அவர் 2036 ஆம் ஆண்டுவரை சனாதிபதி பதவியில் இருக்க வழி செய்துள்ளது. அதாவது இந்த சட்டம் அவர் மேலதிகமாக இரண்டு தடவைகள் சனாதிபதி ஆக பதிவில் இருக்க வசதி செய்துள்ளது.
.
தற்போதைய சட்டப்படி பூட்டின் 2024 ஆம் ஆண்டுவரை மட்டுமே சனாதிபதியாக பதவியில் இருக்க முடியும். இன்றைய சட்டம் அவரின் இரண்டு மேலதிக 6-வருட ஆட்சிகளுக்கு வழி செய்துள்ளது.
.
2000 முதல் 2008 ஆம் ஆண்டு வரையான காலத்தில் பூட்டின் சனாதிபதியாக இரண்டு 4-வருட ஆட்சியை செய்தவர். பின்னர் ஆட்சி காலத்தை 6 வருடமாக நீட்டி, 2012 முதல் 2018 வரை ஆட்சி செய்திருந்தார். அதன்படி அவரின் தற்போதைய ஆட்சி 2024 இல் முடிவடை இருந்தது.
.
1952 ஆம் ஆண்டு பிறந்த பூட்டின் 1975 ஆம் ஆண்டில் அந்நாட்டின் உளவு அமைப்பான KGB யில் இணைந்திருந்தார். முன்னாள் ரஷ்ய சனாதிபதி Boris Yeltsin ஆதரவுடன் பூட்டின் சனாதிபதியானார்.
.
2008 ஆம் ஆண்டில் இவர் சனாதிபதியாக போட்டியிடுவது தடை செய்யப்பட்டபோது, தனது நம்பிக்கைக்கு உரிய Dmitry Medvedev என்பவரை கைப்பொம்மை சனாதிபதி ஆக்கி, தான் பிரதமர் ஆகி இருந்தார் பூட்டின்.
.