2024 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பெண் சனாதிபதி?

USFlag

2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் முதல் தடவையாக பெண் ஒருவர் சனாதிபதி ஆகும் வாய்ப்பு சந்தர்ப்ப வசமாக அதிகரித்து உள்ளது. 2024 ஆம் ஆண்டில் வேறுபட்ட காரணங்கள் ஒன்றாக சந்திக்க உள்ளதால், அங்கு முதல் தடவையாக ஒரு பெண் சனாதிபதி ஆகலாம்.
.
கரோனா வைரஸ் விசயத்தை திறமையாக கையாளாத காரணத்தால் தற்போதைய சனாதிபதி ரம்புக்கு ஆதரவு குறைந்துள்ளது. அமெரிக்காவில் சில மாநிலங்கள் எம்போதுமே Democratic கட்சிக்கு ஆதரவை வழங்குவன. சில ரம்பின் Republican கட்சிக்கு ஆதரவை வழங்குவன. அந்த ஆதரவுகள் ஏறக்குறைய சமனாக இருப்பதால் swing states எனப்படும் Florida, Michigan, Pennsylvania, Wisconsin போன்ற மாநிலங்களே இறுதியில் யார் சனாதிபதி என்பதை தீர்மானிக்கும். அந்த மாநிலங்களில் ரம்பின் ஆதரவு சரிந்து வருகிறது.
.
அதேவேளை 77 வயதான ஜோ பைடென் (Joe Biden) Democratic கட்சி சார்பில் நவம்பர் மாதம் ரம்புக்கு எதிராக போட்டியிடுகிறார். பைடென் சனாதிபதியாக தெரிவு செய்யப்படல் தான் இரண்டாம் தடவைக்கு போட்டியிடேன் என்றுள்ளார். 2024 ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் அவருக்கு வயது 81 ஆக இருக்கும்.
.
அத்துடன் வரும் நவம்பர் தேர்தலுக்கு தனது உதவி சனாதிபதி ஒரு பெண்ணை கொண்டிருக்க பைடேன் தீர்மானித்து உள்ளார்.
.
உதவி சனாதிபதிகள் பின்னர் சனாதிபதி தேர்தல்களில் போட்டியிடுவது சாதாரணம். தரமான உதவி சனாதிபதியாக செயல்படுபவர்கள் இலகுவில் மீண்டும் சனாதிபதியாக தெரிவு செய்யப்படலாம்.
.
கமலா ஹாரிஸ் (Kamala Harris, கலிபோர்னியா senator), Amy Klobuchar (Minnesota senator), Catherine Masto (Nevada senator), Susan Rice (முன்னாள் தேசிய பாதுகாப்பு செயலாளர்), Elizabeth Warren (Massachusetts senator), Gretchen Whitmer (Michigan ஆளுநர்) ஆகியோர் பைடெனின் தெரிவுக்கு சாதகமாக உள்ளனர்.
.
கமலா ஹாரிஸின் தாயார் மதுரையில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற சியாமளா கோபாலன் (மார்பு புற்றுநோய் நிபுணர்), தந்தையார் Jamaica வில் இருந்து அமெரிக்கா சென்ற Donald Harris (பொருளியல் விரிவுரையாளர், Stanford university).
.