2023ம் ஆண்டில் உலகம் எங்கும் பொருளாதாரம் மந்தமாக இருக்கும் என்றாலும், ஐரோப்பாவில் மந்த நிலை மிகவும் உக்கிரமாக இருக்கும் என்று Organization for Economic Cooperation and Development (OECD) இன்று செவ்வாய் கூறியுள்ளது.
1970ம் ஆண்டுகளில் எரிபொருள் தடைகளால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலைக்கு பின் 2023ம் ஆண்டு மந்தநிலை உக்கிரமாக இருக்கும் என்கிறது OECD.
OECD கணிப்புப்படி இந்த ஆண்டு 3.1% ஆக உள்ள உலக பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டு 2.2% ஆக குறையும். பின் 2024ம் ஆண்டு 2.7% ஆக அதிகரிக்கும்.
ரஷ்யாவின் யூகிறேனுடனான மீதான யுத்தம் ஐரோப்பாவையே அதிகம் பாதிக்கிறது என்று OECD கூறுகிறது.
OECD கணிப்பின்படி இந்த ஆண்டு 3.3% பொருளாதார வளர்ச்சியை கொண்டுள்ள 19 நாடுகளை உள்ளடக்கும் ஐரோப்பிய பொருளாதாரம் அடுத்த ஆண்டு 0.5% ஆக மட்டுமே இருக்கும்.
சில நாடுகளின் அடுத்த ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி: