2022 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு இந்தியர்

India

2022 ஆம் ஆண்டில் தாம் இந்தியரை விண்வெளிக்கு அனுப்ப உள்ளதாக இந்தியா இன்று செவ்வாய் கூறியுள்ளது. அத்துடன் இந்த முயற்சிக்கு $1.43 பில்லியன் மட்டுமே செலவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்தொகை ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் செலவழித்த தொகையிலும் குறைவானதாகும்.
.
இதுவரை ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு தம் நாட்டவரை அனுப்பி உள்ளன. இந்தியா வெற்றிகரமாக இந்தியரை விண்வெளிக்கு அனுப்பின், இந்தியா விண்வெளி சென்ற நாலாவது நாடாகும்.
.
2014 ஆம் ஆண்டில் இந்தியா ஆளில்லா கலம் ஒன்றை செய்வாய் கிரகத்தை அறிய ஏவி இருந்தது. அந்த திட்டத்துக்கு இந்தியா $74 மில்லியன் மட்டுமே செலவழித்து இருந்தது. ஆனால் அவ்வகை Maven Mars திட்டத்துக்கு அமெரிக்கா $671 மில்லியன் செலவழித்து இருந்தது. இந்தியாவில் ஊதியங்கள், வாடகையில் குறைவு என்பதாலும், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் பெரும் செலவு செய்து அறிந்த விடயங்களை இந்தியா அறிந்து கொண்டதும் செலவு குறைய காரணமா அமைந்துள்ளன.
.
சீனா 2003 ஆம் ஆண்டில் சீனர்களை விண்ணுக்கு அனுப்பி இருந்தது. சீனா தற்போது சீனர்களை சந்திரனின் மறுபக்கத்துக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. சந்திரனின் பூமியை நோக்கும் பக்கத்தில் தரை இறங்குவது சற்று சுலபமானது. அவர்கள் இலகுவில் பூமியுடன் தொடர்பு கொள்ளலாம்.
.
ஆனால் அடுத்த பக்கத்தில் இறங்குபவர்கள் நேரடியாக பூமியுடன் தொடர்பு கொள்ள முடியாது. பதிலாக அவர்கள் சந்திரனை சுற்ற ஒரு செய்மதியை ஏவி, அதன் உதவியுடனேயே பூமியுடன் தொடர்பு கொள்ளலாம்.
 .