Transparency International என்ற அமைப்பு செய்யும் ஊழல் கணிப்பின்படி 2021ம் ஆண்டு இலங்கை 102ம் இடத்தில் இருந்துள்ளது. மொத்தம் 180 நாடுகள் இந்த கணிப்புக்கு உள்ளடக்கப்பட்டு இருந்தன. இலங்கை 37/100 புள்ளிகளை மட்டுமே பெற்று இருந்தது.
2020ம் ஆண்டில் இலங்கை 101ம் இடத்தில் இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு ஒரு இடம் பின் சென்றுள்ளது.
டென்மார்க், பின்லாந்து, நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகளும் 88/100 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தில் இருந்துள்ளன. நோர்வே, சிங்கப்பூர், சுவீடன் ஆகிய நாடுகள் 85/100 புள்ளிகளை பெற்று 4ம் இடத்தில் இருந்துள்ளன.
சீனா 45/100 புள்ளிகளை பெற்று 66ம் இடத்தில் உள்ளது. இந்தியா 40/100 புள்ளிகளை பெற்று 85ம் இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் 28/100 புள்ளிகளை பெற்று 140ம் இடத்தில் உள்ளது. பிரதமர் இம்ரான் கான் காலத்தில் அங்கு ஊழல் அதிகரித்து உள்ளதாகவே கணிப்புகள் கூறுகின்றன.
பங்களாதேசம் 26/100 புள்ளிகளை பெற்று 147ம் இடத்தில் உள்ளது.
சோமாலியா, சிரியா ஆகிய நாடுகள் 13/100 புள்ளிகளை மட்டும் பெற்று 178ம் இடத்தில் உள்ளன. தென் சூடான் 11/100 புள்ளிகள் பெற்று 180ம் இடத்தில் உள்ளது.