2018 Winter ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் இன்று ஞாயிரு நிறைவு பெற்றன. வடகொரியாவின் ஏவுகணை நடவடிக்கைகள் காரணமாக குழம்பலாம் என்று கருதப்பட்ட 2018 போட்டிகள் எதிர்பாராத அரசியல் திருப்பங்களின் மத்தியில் நிறைவு பெற்றுள்ளது.
.
.
மொத்தம் 39 பதக்கங்கள் பெற்ற நோர்வே முதலாம் இடத்தில் உள்ளது. 1924 ஆண்டு முதல் இன்றுவரை நோர்வே 8 தடவைகள் winter ஒலிம்பிக்கில் முதலாம் இடத்தை வென்றுள்ளது.
.
.
இரண்டாம் இடத்தில் ஜேர்மனி உள்ளது. ஜேர்மனி 31 பதக்கங்களை வென்றுள்ளது. முற்கால winter போட்டிகளில் ஜேர்மனி 3 தடவைகள் முதலாம் இடத்தில் இருந்துள்ளது.
.
.
மூன்றாம் இடத்தில், 29 பதக்கங்களை பெற்று, கனடா உள்ளது. கனடா 29 பதக்கங்களை பெறுவது இதுவே முதல் தடவை. 2010 ஆம் ஆண்டில் கனடா 26 பதக்கங்களை பெற்றிருந்தது.
.
.
நாடளாவிய அளவில் ஊட்ட போதை பயன்படுத்தியதன் காரணமாக ரஷ்யா இம்முறை போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிப்படவில்லை. ஆனால் ரஷ்ய வீரர்கள் ஒலிம்பி கொடியின் கீழ் போட்டியிட்டனர். அவர்கள் 17 பதக்கங்களை வென்று 7ஆம் இடத்தில் உள்ளனர்.
.
அமெரிக்கா இம்முறை மிக பிரகாசிக்கவில்லை. சுமார் 37 பதக்கங்களை எதிர்பார்த்திருந்த அமெரிக்கா 23 பதக்கங்களை மட்டுமே பெற்றது. அண்மை காலங்களில் பெருமளவு அமெரிக்காவும் கனடாவும் திறமை காட்டும் snowboarding, free style skiing ஆகிய போட்டிகள் winter ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டு இருந்தும், அமெரிக்கா பின்னடைந்து உள்ளது. மேற்கூறிய இரண்டு விளையாட்டுகளில் மட்டும் அமெரிக்கா 11 பதக்கங்களை வென்றுள்ளது.
.
.
அடுத்த winter ஒலிம்பிக் சீனாவின் பெய்ஜிங் நகரில் 2022 ஆம் ஆண்டு இடம்பெறும்.
.
.