2015 உடன்படிக்கையை மேலும் மீறும் ஈரான்

Iran-Nuclear

2015 ஆம் ஆண்டு, ஒபாமா ஆட்சி காலத்தில், ஈரான் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுடன் செய்துகொண்ட அணு வேலைப்பாடுகள் தொடர்பான JCPOA என்ற உடன்படிக்கையில் இருந்து மேலும் விலகும் முறையில் யூரேனியம் வல்லமையாக்கல் (uranium enrichment) வேலைகளை நாளை முதல் ஆரம்பிக்க உள்ளது. இந்த செய்தியை அந்நாட்டு சனாதிபதி இன்று கூறி உள்ளார்.
.
ஒபாமா செய்துகொண்ட JCPOA என்ற உடன்படிக்கைகை மீது ரம்ப் வழமைபோல் வெறுப்பு கொண்டிருந்தார். தான் பதவிக்கு வந்தால் JCPOA உடன்படிக்கையில் இருந்து வெளியேறவுள்ளதாகவும் கூறி இருந்தார். அவ்வாறே பதவிக்கு வந்த ரம்ப் அந்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறினார்.
.
இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவுடன் கூடவே கையொப்பம் இட்ட பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகள் அமெரிக்க தடைகளில் இருந்து தமது பொருளாதாரா நலன்ககளை பாதுகாக்கும் நோக்கில் தமது நாட்டு முதலீடுகளை ஈரானில் இருந்து பின்வாங்கின. தாம் உடன்படிக்கைக்கு அமைய செயல்படாத நிலையிலும், மேற்படி நாடுகள் ஈரானை தொடர்ந்தும் உடன்படிக்கைக்கு அமைய செயல்படுமாறு கூறுகின்றன.
.
விசனம் கொண்ட ஈரான் படிப்படியாக உடன்படிக்கை உறுதிமொழிகளை மீறி வருகிறது. அதேவேளை அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகள் மீண்டும் உடன்படிக்கைக்கு அமைய செயல்பாட்டின், தாமும் தமது மீறல்களை இடைநிறுத்த தயார் என்றுள்ளது ஈரான்.
.