உலகின் மிகப்பெரிய தாவரம் அஸ்ரேலியாவுக்கு அருகில் அண்மையில் காணப்பட்டுள்ளது. சுமார் 200 சதுர km கொண்ட இந்த கடல் தாவரம் (sea grass) ஒரு விதையில் இருந்து வளர்ந்தது என்பதாலேயே இது ஒரு தனி தாவரமாக கணிக்கப்படுகிறது. அத்துடன் இந்த தாவரம் சுமார் 4,500 ஆண்டுகள் பழமையானது என்றும் கணிக்கப்படுகிறது.
அஸ்ரேலியாவின் Perth நகருக்கு வடக்கே சுமார் 800 km தூரத்தில் உள்ள Shark Bay என்ற இடத்திலேயே இந்த கடல் தாவரம் உள்ளது.
University of Western Australia ஆய்வாளர் 18,000 மாதிரியை (DNA samples) தாவரத்தின் பல்வேறு இடங்களில் எடுத்து ஆராய்ந்தபோது அவை அனைத்தும் ஒரு தாவரத்துக்கு உரிய DNA என்று அறியப்பட்டுள்ளது.
Poseidon’s ribbon weed என்று அழைக்கப்படும் இந்த தாவரம் ஆண்டு ஒன்றில் 35 cm படர்வதால், 200 சதுர km பரப்பளவை அடைய சுமார் 4,500 ஆண்டுகள் எடுத்திருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.