நேற்று நாடளாவிய அளவில் இடம்பெற்ற இலங்கை பொது தேர்தலில் அனுர குமார (AKD) தலைமையிலான ஆட்சி மொத்தம் 225 பாராளுமன்ற ஆசனங்களில் 159 ஆசனங்களை பெற்று 2/3 பெரும்பான்மை ஆட்சி அமைக்கவுள்ளது. சிங்ககளத்துடன் தமிழும் இணைந்து செய்த இந்த சாதனை இலங்கைக்கு பெரும் பயனை வழங்காவிட்டாலும் பெரும் கொள்ளைகளை நிறுத்தும் அல்லது குறைக்கும்.
இது மேற்கு நாடுகளையே வியக்க வாய்த்த சிங்களத்தின் 3ம் சாதனை. முதலாவது கோத்தபாயாவை விரட்டியது, இரண்டாவது AKD யை சனாதிபதி ஆக்கியது. சிங்களத்தின் முதல் இரண்டு சாதனைகளிலும் தமிழ் அரசியல் நாட்டாண்மைகளின் கூற்றுக்கு ஏற்ப பங்கு எடுக்காத இலங்கை தமிழ் சிங்களத்தின் மூன்றாம் சாதனையில் தமிழ் அரசியல் தலைமைகளின் கூற்றுகளை மீறி பங்கு எடுத்துள்ளது.
சிங்களம் பெரும்பான்மையான தெற்கில் மட்டுமல்லாது இலங்கை தமிழ் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கிலும் AKD அணி முன்னிலையில் உள்ளது.
யாழ் மாவட்ட ஆசனங்கள்: NPP 3, தமிழரசு 1, காங்கிரஸ் 1, Group17 1
கிளி மாவட்ட ஆசனங்கள்: NPP 3, தமிழரசு 1, காங்கிரஸ் 1, Group17 1
வன்னி மாவட்ட ஆசனங்கள்: NPP 2, SJB 1, தமிழரசு 1, DTNA 1, SLLP 1
முல்லை மாவட்ட ஆசனங்கள்: NPP 2, SJB 1, தமிழரசு 1, DTNA 1, SLLP 1
திருமலை மாவட்ட ஆசனங்கள்: NPP 2, SBJ 1, தமிழரசு 1
மட்டக்களப்பு மாவட்ட ஆசனங்கள்: தமிழரசு 3, NPP 1, SLMC 1
அம்பாறை மாவட்ட ஆசனங்கள்: NPP 4, SLMC 1, காங்கிரஸ் 1, தமிழரசு 1
தமிழ் தலைமைகளை கொண்ட காட்சிகள் வரும் காலத்தில் தமிழ் தேசிய மாவை மட்டும் அரைத்து செத்த பின்னரும் அனுபவிக்கும் சுகபோகங்களை தொடர்ந்தும் அனுபவிக்க முடியாது. தமிழ் தேசியத்துக்கு அப்பால் பல பெரும் இடர்கள் வடக்கு-கிழக்கில் உள்ளன.
மேற்கு நாடுகளின் பத்திரிகைகள் NPP வெற்றியை குறிப்பிடும்போது தவறாது அது ஒரு இடதுசாரி அல்லது சோஷலிச கட்சி என்பதை குறிப்பிடுகின்றன.இந்த வெற்றி மேற்குக்கும் அதன் ஆளுமைக்கும் ஒரு ஆபத்தாகவே அவை கருதுகின்றன.
அமெரிக்கா பொதுவாக இடதுசாரி அரசுகளுடன் (கியூபா, வெனிசுஏல) உறவை வைப்பதில்லை. ஆனால் கம்யூனிச வியட்னாமுடன் சீனாவை எதிர்க்கும் நோக்கில் அமெரிக்கா உறவை வளர்ந்துள்ளது.
NPP ஆட்சி இந்தியாவையே அதிகம் பாதிக்கும். இந்தியா சொன்னதை செய்யும் கைப்பிள்ளை தற்போது இலங்கையிலும் இல்லை, பங்களாதேசத்திலும் இல்லை.