கரோனா வைரஸ் பரவலை தடுக்க மடகாஸ்கர் (Madagascar) சனாதிபதி Andry Rajoelina உள்ளூரில் தயாரித்த Covid-Organic என்ற பாணம் ஒன்றை மக்களுக்கு வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.
.
விஞ்ஞான முறைப்படி ஆய்வு செய்யாத இந்த பாணம் அந்நாட்டு National Medial Academy யின் அனுமதி பெற்ற மருந்தல்ல. World Health Organization னும் இந்த உள்ளூர் பாணத்தை அனுமதிக்கவில்லை. இந்த பாணம் கடுமையான கசப்பு சுவையும் கொண்டது.
.
பாணத்தின் கசப்பு சுவையை அறிந்த கல்வி அமைச்சர் Rijasoa Andriamanana அரச பாணத்தில் $2 மில்லியன் பெறுமதிக்கு lollipop என்ற சிறுவர்களுக்கான இனிப்பை இறக்குமதி செய்துள்ளார். பாணத்தை சிறுவர்கள் அருந்திய பின் அவர்கள் உணரும் கசப்பு சுவையை நீக்கவே இந்த lollipop இனிப்பு என்று கூறியுள்ளார் கல்வி அமைச்சர்.
.
கல்வி அமைச்சர் மீது விசனம் கொண்ட சனாதிபதி கல்வி அமைச்சரின் பதவியை பறித்து உள்ளார்.
.
பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்படாத பாணத்தை மக்களுக்கு வழங்கலாமா என்ற France 24 செய்தி நிறுவன கேள்விகளுக்கு பதிலளித்த சனாதிபதி பாணத்துக்கான எதிர்ப்பு மேற்கு நாடுகளின் ஆபிரிக்கா மீதான வெறுப்புக்கு உதாரணம் என்றுள்ளார்
.