சனத்தொகை வேகமாக அழிந்துவரும் நாடுகளுள் முன்னணி வகிப்பது ஜப்பான். 1915 இல் 7.7% சனத்தொகை அதிகரிப்பு, 1930 இல் 7.0% அதிகரிப்பு, 1950 இல் 15.6% அதிகரிப்பு, 1975 இல் 7.9% அதிகரிப்பு என்றெல்லாம் இருந்த ஜப்பானில் 2005 இல் சனத்தொகை அதிகரிப்பு வெறும் 0.7% ஆகி, அது 2010 இல் 0.2% ஆகி தற்போது சனத்தொகை வீழ்ச்சியை எதிர்பார்க்கிறது. அதாவது 2012 இல் சனத்தொகை மாற்றம் -0.4% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இங்கு வேகமாக அதிகரித்து வருவது முதியோர் எண்ணிக்கையே. 1930களில் இருந்து 1980 கள்வரை முதியோர் தொகை மொத்த சனத்தொகையின் 5% – 8% வரையே இருந்து வந்தது. ஆனால் 2005 இல் முதியோரின் தொகை மொத்த சனத்தொகையின் 20.1% ஆகவும், 2010 இல் அது 23.1% ஆகவும் அதிகரித்து உள்ளது.
இவ்வாறான மாற்றங்களுக்கு ஏற்ப தேவைகளும் மாறி வருகிறது. 1994 ஆம் ஆண்டில் ஜப்பானில் இருந்த மொத்த எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எண்ணிக்கை 60,000 ஆனால் இன்று அங்கு 35,000 எரிபொருள் நிரப்பு நிலையங்களே உள்ளன.