1971 ஆம் ஆண்டில் இந்திய குடும்பம் ஒன்றுக்கு சராசரியாக 5.2 பிள்ளைகள் பிறந்துள்ளனர். ஆனால் 2016 ஆம் ஆண்டில் குடும்பம் ஒன்றுக்கு சராசரியா 2.3 பிள்ளைகள் மட்டுமே பிறந்துள்ளன. அதேவேளை இந்தியாவின் பெரும் நகர்களில் குடும்பம் ஒன்றுக்கான பிறப்பு விகிதம் 2.1 க்கும் குறைவாகவே உள்ளது. ஒரு நாட்டின் சனத்தொகை மாறாமல் இருக்க அந்நாட்டில் சராசரி பிறப்பு விகிதம் 2.1 ஆக இருத்தல் அவசியம்.
.
மிகையான பிறப்பு விகிதம் இருந்த காரணத்தாலேயே 1971 ஆம் ஆண்டில் 566 மில்லியன் ஆக இருந்த இந்திய சனத்தொகை 2016 ஆம் ஆண்டில் 1.35 பில்லியன் ஆக உயர்ந்திருந்தது. ஆனால் தற்போதைய குறைந்த பிறப்பு விகிதம் காரணமாக இந்திய சனத்தொகை விரைவில் வீழ்ச்சி அடையலாம் என்று கருதப்படுகிறது.
.
சீனாவில் நீண்ட காலமாக ‘ஒரு குழந்தை மட்டும்’ என்ற அரச கட்டுப்பாடு இருந்தமையால் அங்கு பிறப்பு விகிதம் மிக குறைவாக இருந்தது. ஆனால் அக்காலத்தில் இந்தியாவில் அவ்வாறான கட்டுப்பாடு எதுவும் இருந்திருக்கவில்லை.
.
சனத்தொகை வீழ்ச்சி அடையும் என்பதை உணர்ந்த சீனா அண்மையில் ‘ஒரு குழந்தை மெட்டும் என்ற சட்டத்தை நீக்கி உள்ளது.
.
United Nations Population Fund (UNFPA) வெளியிட்ட தரவுகளின்படி சுமார் 20.9 மில்லியன் சனத்தொகையை கொண்ட இலங்கையில் பிறப்பு விகிதம் சுமார் 2.0 ஆக உள்ளது.
.
ஆபிரிக்க நாடுகளில் மட்டுமே தற்போது அதிக அளவிலான பிறப்பு விகிதம் உள்ளது. வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் ஆகிய இடங்களில் பிறப்பு விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது.
.