பிரித்தானியாவின் Jurassic Coast கடலோரம் சுமார் 150 மில்லியன் ஆண்டுகள் பழமையான pliosaur என்ற வகை கடல் வாழ் விலங்கின் தலை எச்சம் ஒன்று கண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தலை 2 மீட்டர் நீளம் கொண்டது. அதனால் இந்த கடல் வாழ் உயிரினத்தின் மொத்த நீளம் 10 முதல் 12 மீட்டராக இருந்திருக்கும் என ஊகிக்கப்படுகிறது. இதன் மிகுதி உடல் அவ்விடத்தில் காணப்படவில்லை.
இதற்கு 130 பற்கள் உண்டு. இதன் கடிக்கும் பலம் 33,000 N (newtons) என்றும் கூறப்படுகிறது. மனித கடியின் பலம் சுமார் 700 N மட்டுமே.
ஒரு நாயின் கடி 1,000 N பலமும், சிங்கத்தின் கடி 4,000 N பலமும், கடல் முதலையின் கடி 16,000 N பலமும், டைனோசர்/Tyrannosaurus கடி 45,000 N பலமும் கொண்டன.