15 நிமிட வாடகை கார் சேவைக்கு Uber கட்டனம் $39,000

15 நிமிட வாடகை கார் சேவைக்கு Uber கட்டனம் $39,000

சுமார் 15 நிமிட கார் சேவைக்கு வாடகை கார் சேவை செய்யும் ஊபர் (Uber) நிறுவனம் சுமார் $39,000 கட்டணம் அறவிட முனைந்துள்ளது. தவறு பின்னர் திருத்தப்பட்டாலும் online payment, direct payment போன்ற வசதிகள் பெரும் இடரையும் வழங்க வல்லன என்பதை இது காட்டுகிறது.

இங்கிலாந்தின் Manchester நகரில் வாழும் Oliver Kaplan என்ற நபர் வாடகை காரில் சுமார் 15 நிமிடம் பயணிக்கும் தூரம் செல்ல ஊபர் வாடகை கார் சேவையை அழைத்துள்ளார். அந்த தூரத்துக்கு 10.00 முதல் 11.00 பிரித்தானிய பவுண்ட் கட்டணம் அறவிடப்படும் என்று ஊபர் தெரிவித்தது.

அறிவித்த கட்டணத்துக்கு இணங்கிய Kaplan என்றும் போலவே ஊபர் வாடகை கார் சேவையை பயன்படுத்தினார்.

ஆனால் மறுதினம் கட்டணத்தை அறவிட அவரின் வங்கி கணக்கில் போதிய பணம் இல்லை என்று ஊபர் நிறுவனம் Kapla னுக்கு email விட்டுள்ளது. வியப்படைந்து விசயத்தை ஆராய்ந்த Kaplan தனக்கு சேவை வழங்கிய ஊபர் நிறுவனம் 35,427.97 பவுண்ட் (சுமார் $39,000) பணத்தை அறவிட முனைந்ததை கண்டுள்ளார்.

தவறுக்கு காரணம் ஊபர் தனது பயண கணிப்பில் Kaplan பிரித்தானியாவில் உள்ள Manchester நகரத்தில் இருந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள அஸ்ரேலியா சென்றதாக கருதி உள்ளது.

உண்மையை அறிந்த ஊபர் கட்டணத்தை 10.73 பவுண்ட் என்று பின்னர் திருத்தியது.

Kaplan ஒரு செல்வந்தர் ஆக இருந்திருந்தால் அவர் தான் அறியாமலே 35,427.97 பவுண்ட் பணத்தை இழந்திருக்கக்கூடும்.

ஊபர் நிறுவனம் விமான அல்லது கப்பல் சேவை செய்யும் நிறுவனம் அல்ல. இது ஒரு வாடகை கார் சேவை செய்யும் நிறுவனம் மட்டுமே. ஊபர் நிறுவனத்தின் கணனி இவ்வாறு கணிப்பீடுகளை செய்ய முடியாது.