சுமார் 140 ஆண்டுகளின் பின் தற்போது சீனாவில் பெருமழை பொழிகிறது. இந்த மழை வெள்ளத்துக்கு குறைந்தது 20 பேர் பலியாகியும், 27 பேர் இருப்பிடம் அறியாதும் உள்ளனர்.
இந்த பெருமழைக்கு Doksuri என்ற சூறாவளியே காரணம். பிலிப்பீனை நோக்கி மேற்கு திசையில் பயணித்த இந்த சூறாவளி பின் வடக்கு நோக்கி சென்று பெய்ஜிங்கை தாக்கியுள்ளது.
தலைநகர் பெய்ஜிங்குக்கு அண்மையில் சனி முதல் புதன் வரையான காலத்தில் 744.8 mm (29.3 அங்குலம்) மழை பொழிந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 1891ம் ஆண்டுக்கு பின் இதுவே அதிகம்.
சூறாவளியின் தாக்கம் தொடர்ந்தும் பெய்ஜிங் பகுதியை பாதித்து வருகிறது.
சீனாவில் 1998ம் ஆண்டு இடம்பெற்ற வெள்ளத்துக்கு சுமார் 4,000 பேர் பலியாகியும், 2021ம் ஆண்டு வெள்ளத்துக்கு 300 பேர் பலியாகியும் இருந்தனர்.