அமெரிக்காவின் Democratic கட்சி தலைவர்களுக்கு 14 குழாய் குண்டுகளை தபால் மூலம் அனுப்பிய அமெரிக்கர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவரின் வாகனமும் கைப்பற்றப்பட்டு உள்ளது. Florida மாநிலத்தில் உள்ள Plantation என்ற நகரிலேயே இந்த கைது இடம்பெற்று உள்ளது.
.
கைது செய்யப்பட்டுள்ள, 56 வயதுடைய, Cesar Sayoc என்பவர் ஒரு ரம்ப் ஆதரவாளர். ரம்பின் பிரச்சார கூட்டங்கள் பலவற்றுக்கு சென்ற இவர், அந்த இடங்களில் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை Internet எங்கும் பதித்துள்ளார். அவரின் வாகனத்திலும் ரம்ப் ஆதரவு கருத்துக்கள் பதியப்பட்டுள்ளன.
.
இவர் அனுப்பிய குண்டுகளில் ஒன்று இவரின் கைரேகையை கொண்டிருந்துள்ளது. அவரின் கைரேகையையும், DNA யையும் கொண்டே அமெரிக்க அதிகாரிகள் விரைந்து கைதை மேற்கொண்டுள்ளனர். இவரின் வாகனத்தில் (van) இருந்து மேலும் இரண்டு குண்டுகள் எடுக்கப்பட்டுள்ளன.
.
1991 ஆம் ஆண்டு இவர் களவு, போதை பொருள் போன்ற காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு இருந்தவர். 2012 ஆம் ஆண்டு bankruptcy க்கும் விண்ணப்பம் செய்திருந்தார்.
.