100,000 ஆர்மீனியர் அஜர்பைஜானை விட்டு வெளியேறினர்

100,000 ஆர்மீனியர் அஜர்பைஜானை விட்டு வெளியேறினர்

சுமார் 100,000 ஆர்மீனியர் அஜர்பைஜானை விட்டு வெளியேறி அடுத்து உள்ள ஆர்மீனியாவை அடைந்துள்ளனர். இந்த நகர்வு சுமார் 30 ஆண்டுகளாக நிலவி வந்த Nagorno-Karabakh முரண்பாட்டை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

Nagorno-Karabakh மலை பகுதி முழுமையாக அஜர்பைஜான் (Azerbaijan) உள்ளே உள்ளது. உலக சட்டப்படியும் இப்பகுதி இஸ்லாமிய அஜர்பைஜானுக்கு உரியது. ஆனால் இங்கு வாழ்ந்த சுமார் 120,000 கிறீஸ்தவ ஆர்மினியர் இதை தமது நிலம் என்றனர்.

சோவியத் உடைந்த பின் இப்பகுதியில் வாழ்ந்த ஆர்மீனிய கிறீஸ்தவர் தனிநாடு கேட்டு போராடினர். இப்பகுதியை ஒரு சிறு ஒடுங்கிய  நிலப்பரப்பு ஆர்மீனியாவுடன் (Armenia) இணைக்கிறது. சில தினங்களுக்கு முன் அந்த தொடர்பை (Lachin corridor) அஜர்பைஜான் படைகள் மூடி, Nagorno-Karabakh பகுதியை சுற்றி வளைத்து.

தம்மை சுற்றிவளைத்த பின் ஆர்மீனிய போராளிகள் வேறு வழியின்றி ஆயுதங்களை கைவிட்டனர். அதை தொடர்ந்து ஆர்மீனியர் ஆர்மீனியா நோக்கி நகர ஆரம்பித்தனர்.

அஜர்பைஜான் தனது சட்டங்களை மதிக்கும் ஆர்மீனியர் தொடர்ந்தும்  Nagorno-Karabakh பகுதியில் வாழலாம் என்கிறது. ஆனால் அப்பகுதி ஆர்மீனியர் அதை நம்புவதாக இல்லை.