அமெரிக்க அரசு தனது முதலீடுகளுக்கு Treasury bills (மிக குறுகிய கால கடன்), Treasury notes (குறுகிய கால கடன், சுமார் 10 ஆண்டுகள்), Treasury bond (நீண்ட கால கடன், சுமார் 30 ஆண்டுகள்), TIPS ஆகிய 4 முறைகளில் கடன் பெறுகிறது. உலகிலேயே இந்த கடன் மிகவும் நம்பிக்கையானது என்று கருதப்படுவதால் யுத்த காலம் போன்ற ஆபத்தான காலங்களில் அமெரிக்க Treasury கடனை பெறுவார். இந்த கடன்களின் முதலும், வட்டியும் பத்திரமாக கிடைக்கும் என்ற நம்பிக்கையே காரணம்.
யூக்கிறேன் யுத்தம், காசா யுத்தம், அமெரிக்க-சீன பொருளாதார முறுகல் நிலை ஆகிய நெருக்கடி நிலை காரணமாக நீண்ட காலத்தின் பின் அமெரிக்காவின் 10 ஆண்டுகால Treasury notes கடனுக்கு 5.004% வழங்கப்படுகிறது.
அதேநேரம் 30-ஆண்டு Treasury bond கடன் 5.164% வட்டியையும், 2-ஆண்டு Treasury notes கடன் 5.125% வட்டியையும் பெறுகிறது.
இதனால் வங்கிகள், தனியார் நிறுவனங்கள் வழங்கும் வட்டி மேலும் அதிகரிக்கும்.
2022ம் ஆண்டில் அமெரிக்காவுக்கு அதிகம் கடன் வழங்கிய நாடுகள் வருமாறு:
1) ஜப்பான்: $1,230 பில்லியன்
2) சீனா: $938 பில்லியன்
3) பிரித்தானியா: $612 பில்லியன்
…
12) இந்தியா: $208 பில்லியன்
15) சிங்கப்பூர்: $179 பில்லியன்