இந்தோனேசியாவின் social affair அமைச்சர் 15.5 பில்லியன் இந்தோனேசிய ருப்பியாய் (சுமார் $1 மில்லியன்) இலஞ்சம் பெற்று, அகப்பட்டு கொண்டார். அந்த அமைச்சரை அதிகாரிகள் தற்போது கைது செய்துள்ளனர்.
சனிக்கிழமை கைப்பற்றப்பட்ட மேற்படி இலஞ்ச பணம் 7 பயண பெட்டிகள், 3 தோள்பைகள், காகித உறைகள் என்பவற்றுள் இருந்தன என்று இலஞ்ச ஒழிப்பு ஆணையாளர் Firli Bahuri கூறியுள்ளார்.
கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு வழங்கும் திட்டத்துக்கு தனியார் நிறுவனங்களை அமைக்கும் செயற்பாடுகளின்போதே இலஞ்சம் வழங்கப்பட்டு உள்ளது. மக்களுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு உணவு பொதிக்கும் 10,000 ருப்பியாய் ($0.71) இலஞ்சம் வழங்கப்பட்டு உள்ளது.
இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதில் இருவர் அரச ஊழியர்.
இந்தோனேசிய சனாதிபதி தான் அமைச்சர்களை ஊழலில் ஈடுபடவேண்டாம் என்று பலமுறை எச்சரித்ததாக ஞாயிருக்கிழமை கூறி இருந்தார். இலஞ்சம் பெற்று அகப்படுவோரை தான் பாதுகாக்க மாட்டேன் என்றும் சனாதிபதி கூறி உள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அமைச்சர் 20 ஆண்டு சிறை தண்டனை பெறுவார்.